வைராக்கியம் – வெற்றியை நோக்கிச் செல்லும் உந்து சக்தி

இன்பம் மட்டும் வந்தால் நான் வாழ்க்கையில் அனைத்தையும் சாதித்து விடுவேன் என்பது வாழ்க்கை அல்ல .வாழ்க்கையில் இன்பத்தை மட்டும் கண்டவனும் இல்லை! துன்பத்தை மட்டும் கண்டவனும் இல்லை!

மனிதனாகப் பிறந்த நாம் ஒவ்வொருவருக்கும் கனவு, லட்சியம் ,குறிக்கோள் அனைத்தும் இருக்கும். மனிதனுடைய சூழ்நிலையாலும், அறியாமையாலும் கனவை விட்டு தூரத்தில் நின்று கொண்டிருக்கும் சிலர்!

வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் நாணயத்தின் இரு பக்கம் போல மாறிமாறி வரக்கூடிய செயல். நான் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவன் எல்லா சூழ்நிலைகளிலும் எந்த ஒரு காலகட்டத்திலும் வைராக்கியத்தோடு தனது லட்சியத்தை நோக்கி ஓடி பயணிப்பான். உசேன் போல்ட் நான்கு வருடமாக நான்கு நிமிட போட்டிக்காக பயிற்சி செய்கிறார் நான்கு வருடம் தொடர்ந்து பயிற்சி செய்தால் மட்டுமே போட்டியில் ஜெயிக்க முடியும். தொடர் பயிற்சியும் முயற்சியும் இல்லாமல் வெற்றியடைய முடியாது . சிலர் சிறிது காலம் மட்டுமே ஒரு இலக்கிற்காக பயிற்சியும் முயற்சியும் எடுப்பார்கள் ஆனால் இலக்கை அடைய முடியவில்லை எனில் அவர்கள் விரும்பும் இலக்கை விட்டுவிட்டு வாழ்க்கை கொண்டு போகும் திசைக்கு சென்று விடுவார்கள் இதுதான் அவர்களது அறியாமை.

தொடர்பயிற்சியும் தொடர் முயற்சியும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். கனவை நோக்கி சில காலங்களில் சில நேரங்களில் ஓடுவோம். ஆனால் நம் இலக்கை தொட முடியவில்லை எனில் இலக்கை, கைவிட்டு விடும் மன நிலைக்கு செல்லும் மனப்போக்கு இங்கு நிறைய மக்களிடம் உள்ளது.

வைராக்கியம் ஒன்று மட்டும்தான் மனிதனை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியும் .ஒரு மனிதன் வெற்றி பெற வேண்டுமானால் அவன் நிச்சயமாக வைராக்கியத்தோடு இருக்கவேண்டும். வைராக்கியத்தோடு சில பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் .வைராக்கியத்தோடு சிலவற்றை விட்டுக்கொடுக்க வேண்டும். எதையுமே விட்டுக் கொடுக்காமல் வாழ்க்கையில் சாதிப்பது என்பது இயலாத காரியம். ஒரு நபர் போட்டித்தேர்வுக்கு தயாராகு பவராக இருக்கலாம் அல்லது தொழில் முனைவர் ஆக இருக்கலாம் அல்லது கண்டுபிடிப்பாளர் ஆக இருக்கலாம், வாழ்க்கையில் சில பழக்கங்களை விட்டுக் கொடுத்தால் மட்டுமே உதாரணமாக நேரத்தை வீணாக செலவழிப்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் பார்ப்பது பொழுதுபோக்காக கூடி பேசுதல்
இதுபோல பழக்கவழக்கங்களை விட்டுக்கொடுக்க வேண்டும்.

நாம் ஒரு இலக்கை அடைய வேண்டுமென்று தீர்மானித்தால்
வைராக்கியத்தோடு அந்த இலக்கில் வெற்றியடைய வேண்டும்.

முன்னேறிச் செல் !உன் வாழ்க்கை உன் கையில்! இங்கு உன்னை தூக்கி விட யாரும் வர மாட்டார்கள். ஆனால் உன்னை கீழே தள்ள மிகப் பெரிய கூட்டமே காத்திருக்கும். எதற்கும் கவலைப்படாதே !மனம் தளராதே !வைராக்கியத்தோடு உன் இலக்கை நோக்கி பயணித்து செல்!

Way to success

Leave a Comment