இன்றைய காலகட்டத்தில் நாம் பழகும் மனிதர்களில் சிலபேர் எப்பொழுதும் அடுத்தவருடைய பழக்கத்தையும் நடவடிக்கைகளையும் எடை போட்டுக் கொண்டே சிந்தித்து பழகுவர். அந்தக் காலத்தில் சிறு குழந்தைகள் அனைவரும் தெரு ஓரங்களில் கூட்டம் கூட்டமாக விளையாடுவார்கள் பெண்கள் அனைவரும் அக்கம்பக்கத்தினர் வீட்டோடு சகஜமாய் பழகுவார்கள் தெருக்கள் முழுவதும் குழந்தைகள் சத்தமும் மகிழ்ச்சியும் காணப்படும்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் குடும்பத்திலுள்ள அனைவருமே தன்னுடைய வீட்டுக்குள்ளே தன்னுடைய நேரத்தை கழிக்கின்றனர் ஆதலால் மற்றவர்களுடன் இயல்பாக பழகவோ பேசுவதோ கிடையாது குறிப்பாக வெளி உலக அனுபவமும் இருக்காது. ஆதலால் சில குழந்தைகள் , ஏன்?குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள் கூட எதார்த்தமான வர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில மனிதர்கள் அடுத்தவர்களை அவர்களுடைய மனப்போக்கு அவர்களுடைய நடவடிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களை எளிமையாக ஏமாற்றி விடுகின்றனர்.
முன்பெல்லாம் வாழ்க்கையில் மனகஷ்டம் வரும்போது அதை பிறரிடம் பகிர்ந்துகொண்டு நல்ல ஆலோசனை உள் வாங்கிக்கொண்டுமன கஷ்டத்தில் இருந்து வெளி வருவதுண்டு. இன்றைக்கு ஒருவர் தன்னுடைய மன கஷ்டத்தையும் மன போராட்டத்தையோ பிறரிடம் சொல்லும்போதுதான் எளிமையாக ஏமாற்றப்படுகின்றனர்.
அதற்காக யாரிடமும் கஷ்டத்தை சொல்ல வேண்டாமா?
அப்படி சொல்லவில்லை.
நாம் நமக்குள் நடக்கும் கஷ்டங்களை அடுத்தவரிடம் எளிமையாக பகிர்ந்து கொள்ளக் கூடாது
ஏனென்றால் ஒரு சில மனிதர்கள் ஒரு கடையில் பொருட்களை வாங்கும்போது ஒரு கடைக்காரர் எவ்வாறு ஒவ்வொரு பொருளுக்கும் எடை போட்டு கொண்டிருக்கிறாரோ அதே போலத்தான் சில மனிதர்கள் இருக்கிறார்கள்
அவர்கள் ஒவ்வொரு மனிதரையும் அவர்களுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எடை போட்டுக் கொண்டே இருப்பார்கள் .
ஒரு சில மனிதர்கள் இருப்பார்கள் அவர்கள் அடுத்தவனுடைய வாழ்க்கையில் என்ன நடக்கின்றது அதற்கு அவன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்று உற்றுநோக்கி பார்ப்பார்கள். அவர்களைப் பொருத்தவரை நாம் விவரமாக இருக்கவேண்டும் எந்த ஒரு விஷயத்திலும் மாட்டி கொள்ளக் கூடாது.
அடுத்தவன் என்ன செய்கிறான் அவனுக்கு என்ன தடைகள் வருகின்றன அவன் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்று வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் நம்மை சுற்றி அநேகர் இருக்கிறார்கள்
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் எடை கற்களாக நிறுத்தி நிறுத்தி நம்மை பார்க்கும் மனிதர்களிடம் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் .ஏனென்றால் அவன் நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் கஷ்டங்களில் பார்த்து கற்றுக்கொள்ள ஆசைப்படுவான் தவிர நமக்கு எந்த விதத்திலும் சிறு உதவி கூட செய்ய மாட்டான்
வாழ்க்கையில் எல்லாரையும் ஈசியா நம்பி விடக்கூடாது
நம்முடைய வெற்றியையும் தோல்வியையும் நமக்குள்ளே வைத்து பழகணும்.
ஒரு சில மனிதர்கள் இருக்கிறார்கள் நம் நம்முடைய வளர்ச்சிக்கு நம்மை சோதித்து பார்த்து நம் தரத்தை உயர்த்துவார்கள் அப்படிப்பட்டவர்களை நம் வாழ்க்கையில் ஒருபோதும் இழந்து விடக்கூடாது.